விருது விழாவுக்கு விக்னேஷ் சிவன் இல்லாமல் தனியாக வந்த நயன்தாரா: இன்னும் கோபமோ

ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய விருது விழாவில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். எந்த விழாவுக்கும் வராத நயன்தாரா இந்த விழாவுக்கு வந்தது அதிசயமாக பார்க்கப்பட்டது. நயன்தாரா புடவையில் சிம்பிளாகவும், அழகாகவும் வந்திருந்தார். அவருக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டது.


விக்கி எங்கே?


விஸ்வாசம் மற்றும் பிகில் படங்களுக்காக ஃபேவரைட் நடிகை விருதும், இந்திய சினிமாவில் பெண்களுக்கு முன்மாதிரியாக இருப்பதால் ஸ்ரீதேவி விருதும் நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. நயன்தாரா எங்கு சென்றாலும் காதலர் விக்னேஷ் சிவனுடன் தான் செல்வார். ஆனால் விருது விழாவுக்கு அவர் தனியாக வந்திருந்தார். இதனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இடையே ஏதாவது பிரச்சனையோ என்கிற பேச்சு கிளம்பியுள்ளது.