ரஜினி சொல்வதை தான் செய்வார், கண்டிப்பா அப்படி இருக்கவே இருக்காது!

தர்பார் படத்தை அடுத்து ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் மீனா,


மஞ்சு வாரியர், ஜோதிகா அல்லது கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தலைவர் 168 படத்தில் நடிப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இனியும் தன் மகள்களை விட வயதில் சின்ன நடிகைகளுடன் டூயட் பாட மாட்டேன் என்று ரஜினி தெரிவித்தார். அதனால் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யாவை விட சின்னவரான கீர்த்தி சுரேஷுடன் ரஜினி நிச்சயம் ரொமான்ஸ் செய்ய மாட்டார் என்று நம்பப்படுகிறது.


முன்னதாக தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க விரும்பினார் ஏ.ஆர். முருகதாஸ்.


ஆனால் ரஜினி தான் கீர்த்தி சின்னப் பெண் வேண்டாம் என்று கூறி நயன்தாராவை பரிந்துரை செய்ததாக செய்திகள் வெளியாகின. அப்படி இருக்கும்போது தற்போது ரஜினி படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். சேர்ந்து நடித்தாலும் அவர்களுக்கு இடையே காதல் காட்சிகள் இருக்காது என்று நம்பப்படுகிறது.