சினிமா படப் பாணியில், தங்களது வீட்டு சுவர்களில் ரகசிய குறியீடுகள் இடப்பட்டுள்ளதை கண்டு துறையூர் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துப் போய் உள்ளனர்.
துறையூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள பெரியார் நகரில் வசிப்பவர் முகமது ரஃபி. வழக்கறிஞரான இவர், நேற்று காலை தனது வீட்டின் சுவர்களில் சந்கேத குறியீடுகள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தென் மாவட்டங்களில் , கொள்ளையர்கள் அடையாளமிட்டிருந்த குறியீடுகள் குறித்த வாட்ஸ்அப் செய்திகளை நினைவுகூர்ந்த முகமது ரஃபி, இதுகுறித்து, துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதேபோன்று, அந்தக் குடியிருப்பில் அவரது வீட்டின் அருகிலும் பூட்டிக் கிடக்கும் வீடுகளில் சந்தேக குறியீடுகள் போடப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால், ஏற்கெனவே மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில், தங்களது வீடுகளின் முகப்பு சுவர்களில் போடப்பட்டுள்ள சங்கேத குறியீடுகளால் அவர்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.